Posts

Showing posts from 2018

01.11.2018 To 30.11.2018

வணக்கம் நண்பர்களே,        எனது பணியானது முடிவடைவதற்கு இன்னும் 2 மாத காலங்களே உண்டு . மற்றும் இந்த மாதம் 935 Article Auto முறையில் என்னால் போடப்பட்டது. மற்றும் Cover Image க்கான Scripts இந்த மாதம் செய்யத்தொடங்கினேன். ஆனால் சில Error பிரசினைகளால் இன்னும் செய்யத்தொடங்கப்படவில்லை.  இந்த மாதம் எனக்கு Finale Of YGC7 உம் நடைபெற்றது. அது பற்றிய தகவலை நான் முதல் அனுப்பிய எனது Blog ல் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். மற்றும்,        Harichandran ஐயா அவர்கள் எனது பணி பற்றியும் நூலக நிறுவனம் பற்றியும் எனது பாடசாலைக்கு சென்று ஓர் அறிமுகம் கொடுக்குமாறு கூறி இருந்தார். நானும் சென்று எனக்கு தெரிந்த ஆசிரியர் ஒருவரிடம் இதை பற்றி உரையாடினேன்.  அவர் கூறினார் " தற்போது மாத தவணை பரீட்சைகள் ஆரம்பம் , எனவே பாடசாலை விடுமுறை விட்டு ஆரம்பமான போது அதிபரின் ஒத்துழைப்புடன் வந்து செய்யுமாறு கூறினார்.  மற்றும் Harichandran ஐயா அவர்கள் எனது பணி முடிவடைந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்றும் கேட்டிருந்தார். 6 மாத காலம் முடிவடைந்ததும் மீண்டும் 6 மாத கால ...

yarl geek challenge season7 semi finale and finaly

Image
வணக்கம் நண்பர்களே,     Uki ல் நாங்கள் செய்து முடித்த Final Project ஆனது yarl geek challenge season7 (YGC7) ல் semi final ற்கு தெரிவானது. இதன்  semi final  யாழ்பாணத்தில் பேரூந்து நிலையத்தின் அருகில் காணப்படுகின்ற HNB  Auditorium ல் நடைபெற்றது. இங்கு அனைத்து இடங்களில் இருந்தும்  வருகை தந்து இருந்தனர். மொத்தமாக 17 Teams தெரிவு செய்யப்பட்டது. அதில் எமது Uki ல் இருந்து 4 Teams தெரிவானது எமது Uki ன் பெருமைக்குரிய ஒன்றாகும். HNB  Auditorium ல் மொத்தமாக 3 நாட்கள் semi final  நடைபெற்றது. அதற்கு chief guest ஆக  Rajan Ananthan is the Managing Director of Google India வருகை தந்து இருந்தார். He was a speech given by Rajan Anandan at Yarl IT Hub -    https://youtu.be/UKtQDTPqBIo வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் Business Model Mentoring  நடைபெற்றது. அதாவது வருகை தந்த ஒவ்வொரு குழுக்களுக்கும் ஒரு mentor வீதம் கொடுக்கப்பட்டு அக் குழுவுடன் கலந்துரையாட விடப்ப்பட்டது. பின் ஞாயிற்றுக்கிழமை அன்று Final Pitching காலை 9 மணி...

பிள்ளைகளின் எதிர்காலம் பெற்றோர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. - கட்டுரை

பிள்ளைகளின் எதிர்காலம் பெற்றோர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. வாசிப்பு என்பது அனைத்து வயதினருக்கும் அவசியமானதொன்றாகும். வாசிப்புப் பழக்கமானது ஒருவரின் அறிவு மட்டுமன்றி, தெளிவு, கிரகித்தல், உடனடியாகப் பதிலளித்தல், நாபிறழ்வின்றி சரளமாகக் கதைத்தல், எவர் முன்பும் பதிலளிக்கக் கூடிய துணிவு, சொல்லாண்மை, வசன உருவாக்கம் போன்ற குணங்களை வளர்க்கின்றது. வாசிப்புப் பழக்கத்தைப் புறம்தள்ளிப் போகின்றவர்கள் இலகுவாகச் சரளமாகக் கதைக்கவோ உடனடியாகப் பதிலளிக்கவோ சிரமப்படுகின்றார்கள். ஒரு விடயத்தை, ஒரு கவிதையை, ஒரு நீண்ட வசனத்தை எளிதில் கிரகித்து விளங்கிக் கொள்ளும் தன்மை குறைவாகக் காணப்படுவதற்கும் வாசிப்புப் பழக்கமின்மையே காரணமாகும். ஒரு பிள்ளை கருவிலிருக்கும் போதே தாய் நல்ல புத்தகங்களை வாசிப்பது பயனுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு பிள்ளையின் வாசிப்புப் பழக்கமானது அப்பிள்ளையின் பெற்றோர்களிலேயே தங்கியுள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வாசிப்புப் பழக்கத்தினைச் சிறுபராயத்தில் இருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு பிள்ளையின் வாசிப்புப் பழக்கத்தினை அதிகரித்துக் கொள்வதற்கு...

Drupal பற்றிய ஒரு அடிப்படை விளக்கம்.

வணக்கம் நண்பர்களே,     இன்று Drupal என்றால் என்ன என பார்ப்போம். நானும் சில நாட்களின் முன்பு தான் இதனை பற்றி Natkeeran அண்ணா மூலமாக அறிந்தேன். அதனை உங்களுக்கும் தெரியப்படுத்த விரும்பும் நோக்குடன் இந்த சாளரம் எழுதுகின்றேன். முதலில் Drupal என்றால் என்ன என பார்த்து விட்டு வருவோம்.                 Drupal என்பது ஒரு கட்டற்ற திறந்த உள்ளடக்க மேலாண்மை மென்பொருள். இது PHP இல் எழுதப்பட்டுள்ளது. சிறியதில் இருந்து பெரிய சிக்கலான வலைத்தளங்கள் வரை Drupal கொண்டு ஆக்கப்பட்டு பராமரிக்கப்படலாம். Drupal ற்கான Users - Developers Marketers Agencies Drupal இனை CMS எனவும் அழைப்பார்கள்.  அதாவது Content Management System . Its used easy to online business . அதாவது  website ஒன்றினை உங்களுக்கு விரும்பிய படி add, edit, publish or remove பண்ணிக்கொள்ளலாம். இங்கு PHP, Ajax, Javascript போன்ற Programming பயன்படுத்தப்படுகின்றது. Drupal இனை ஒரு Scripting Language என்பார்கள். இதனை நீங்கள் Run பண்ணுவதற்கு உங்களுக்கு Database and web...

01.10.2018 To 22.10.2018

 வணக்கம் நண்பர்களே,         மன்னிக்கவும் , சிறிதளவு வேலை காரணமாக என்னால் சில நாட்கள் தொடர முடியவில்லை. இன்று மீண்டும் தொடருவோம்.       நான் இந்த மாத காலத்தில் தெரியாத பல விடயங்கள் படித்திருந்தேன். மற்றும் எனது வழமையான வேலையான  Auto முறையில் கட்டுரைகள் இணைத்தலையும் தொடர்ந்து வந்தேன். இப்போது என்ன புது விடயங்கள் கற்று வந்தேன் என பார்ப்போம்.     இந்த மாதத்தின் முதல் 2 நாட்கள் Auto முறையில் கட்டுரைகள் இணைத்தலில் ஈடுபட்டு வந்தேன். பின் ஒரு நாள் Natkeeran அண்ணா call பண்ணி புதிய வேலை ஒன்று தந்து சென்றார்.      எனது Lap ல் Drupal-8 பதிவிறக்கம் செய்யுமாறு கூறினார். அது வரையில் Drupal என்றால் என்ன என்றே நான் அறியவில்லை.     பின் youtube ல் Drupal பற்றிய video க்களை பார்த்து சற்று அறிந்து கொண்டேன். பின் பதிவிறக்குவதற்கு  youtube ல் video ஒன்றை பார்த்து அதன் படி செய்து வந்தேன். அந்த  video ல் வழி நடத்தி சென்ற போல எல்லாம் சரியாக வந்துகொண்டிருந்தது. நானும் சந்தோசத்தில் இருந்தேன். ஆனால் கடைசியில் localh...

Uki coding - Library Foundation அனுபவம்

Image
வணக்கம் , எனது பெயர் சங்கீதா இராஜசேகரன் . நான் பருத்தித்துறையில் வசிக்கின்றேன். எனது குடும்ப அங்கத்தவர்கள் எண்ணிக்கை ஐந்து . அக்கா Jaffna university ல் படிக்கின்றார். தம்பி 9 ஆம் வகுப்பு படித்து வருகின்றார். நான் தற்பொழுது Jaffna வில் Noolaham Foundation ல் programming சம்பந்தமான வேலை செய்து வருகின்றேன். நாங்கள் நடுத்தர குடும்ப வர்க்கத்தினர். எனது குடும்பமும் போர் நடந்த கால கட்டத்தில் பாதிப்படைந்த குடும்பங்களில் ஒன்று. அன்றைய போர் நிலையில் எங்கள் சொந்த வீட்டைகூட இழக்க வேண்டி வந்தது. தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகின்றோம். தற்போது அப்பா ஊரில் ஒரு பெட்டிக்கடை ஒன்று நடத்தி வருகின்றார். ஒரு நாளைக்கு 1000 ரூபா வீட்டுக்கு கொடுப்பார்.  அதில் தான் எங்கள் உணவில் இருந்து உடைகள் வரை அம்மா பார்த்துக்கொள்வார். இந்த கஷ்டமான நிலையிலும் எனது அப்பா மற்றும் அம்மா என்னையும் எனது சகோதரங்களையும் படிப்பித்து இருக்கின்றார்கள். இவ்வளவு கஷ்டத்தின் மத்தியிலும் நாங்கள் படித்து கொண்டு இருக்கின்றோம். இந்த நிலையில் A/L Exam எடுத்து இருந்த போது IT Teacher  ஒருவரின் மூலம் Uki என்ன...

வேலையின் முதல் மாத அனுபவம்

Image
காலை வணக்கம் நண்பர்களே, நான் வேலையில் சேர்ந்து ஒரு மாதம் முடிவடைந்துவிட்டது. இன்று நான் எனது முதல் மாத அனுபவத்தை உங்களுடன் பகிர உள்ளேன்.எனவே இந்த ஒரு மாத காலத்திற்குள் நான் என்ன பயன் அடைந்துள்ளேன் என சொல்ல விரும்புகின்றேன்.அதுமட்டுமின்றி இந்த நூலக சேவையின் பயனை எல்லோருக்கும் தெரியப்படுத்தும் முகமாக எழுத உள்ளேன். வந்து ஒரு மாத காலத்தில் நிறைய அனுபவத்தை கற்று கொண்டு விட்டேன். என்னை பொருத்தவரை மிகவும் அற்புதமான வேலை தளம். உண்மையில் இந்த வேலைத்தளம் பற்றியும் அவர்கள் என்ன செய்கின்றார்கள் எனவும் அனேகமானவர்களிற்கு தெரியாது. ஆனால் ஒரு காலத்தில் இதன் சேவை யாழ் முழுதும் தெரிய வரும் என்பதற்கு ஒரு துளி சந்தேகமும் இல்லை. முதற்கண் என்னை இந்த தளத்திற்கு அறிமுகப்படுத்திய Harichandran Sir அவர்களிற்கு எனது நன்றியை கூற கடமைப்பட்டுள்ளேன். இதற்கு நான் தகுதி உடையவர் என நம்பி என்னை இதற்குள் பணி புரிய வைத்ததன் முகமாக இந்த நன்றியை செலுத்துகின்றேன். அது மட்டுமின்றி எனது Blog ஐ இன்னும் மேம்படுத்தும் முகமாக எனக்கு ipad ஒன்றை அன்பளிப்பு செய்து இருந்தார். இது எனக்கும் எனது படிப்பிற்கும் மிகவ...

27.08.2018 To 31.08.2018

திங்கள் கிழமை அன்று காலையில் எனது பணியை இறைவனின் துணை கொண்டு இனிதே ஆரம்பித்தேன். அன்று காலையில் Natkeeran Anna  தந்த portal வேலையை செய்து முடித்து விட்டதாக  Natkeeran Anna இற்கு mail ஒன்று அனுப்பி வைத்தேன். பின்பு அவர் வேறு சில படிக்குமாறும் சொல்லியிருந்தார். அதாவது Wiki , Python &   Wiki API , Linux   ,  install mysql  , Islandora   ,  Learn drupal    இவ்வாறு சில படிக்குமாறு சொல்லியிருந்தார். நானும் அடுத்த வேலையாக இவற்றை படிக்க  ஆரம்பித்தேன். Python & Wiki Api பற்றி படிக்க தொடங்கினேன்.   Wiki Api  படிப்பதற்கு அண்ணா Link அனுப்பி இருந்தார். அதன் மூலம் படித்து தெரிந்து கொண்டேன். செவ்வாய்கிழமை -  விடுப்பு தெரிவித்து இருந்தேன். புதன்கிழமை காலையில்  வந்ததும் mysql படிக்க ஆரம்பித்தேன். google இல் tutorial  ஒன்று எடுத்து வாசித்து படித்து தெரிந்து கொண்டேன். உண்மையை கூற வேண்டுமென்றால் சில எனக்கு விளங்கவில்லை . அவற்றை அலைபேசி மூலம் எனது சில நண்பர்களிடம் கேட்டு தெரிந்து புரிந்...

20.08.2018 To 25.08.2018

                 கூத்து portal create Natkeeran அண்ணா அனுப்பி இருந்த நூலகம் link ற்குள் சென்று கூத்து என்ற பெயரில் portal create பண்ண தொடங்கினேன். ஆனால் ஒரு சிக்கல். எனக்கு கூத்து பற்றிய அறிமுகம் இல்லை. ஆதலால் முதலில் கூத்து என்றால் என்ன எனவும் அதை பற்றியும் சில தகவல்களை google it பண்ணி அறிந்து கொண்டேன்.  பின் portal ல் கூத்துக்கான அறிமுகத்தை பதிவு செய்து கொண்டேன்.  வெற்றிகரமாக அதனை செய்து முடித்த பின்பு இன்னும் சில பதிய வேண்டி இருந்தது. அதாவது கூத்து பற்றிய கட்டுரைகள் , நூல்கள், ஆளுமைகள், அமைப்புக்கள் என்பனவும் சேர்க்க வேண்டி இருந்தது. இதை பற்றி எல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாது. ஆனாலும் எனக்கு கவலை இல்லை. ஏன் தெரியுமா... தெரியாத ஒன்றை பற்றி அறிந்து கொள்வதற்கு நம்முடனே இருக்கின்ற ஒரே ஒரு நண்பன் google  .  அவன் இருக்க ஏன் கவலை .   google  பண்ணி  கட்டுரைகள் , நூல்கள் என்பவற்றை அறிந்து எடுத்து பதிவு செய்தேன். ஆனால் ஆளுமைகள் என்றால் என்ன என்று விளங்க வில்லை.  பின்பு மதிய நேரம் சாப...

Wikipedia Editing முதல் அனுபவம்

                             Wikipedia   Wikipedia Editing  (13.08.2018,  MONDAY)   Natkeeran  அண்ணா ஒரு project தந்து இருந்தார். அது சம்பந்தமாக Wikipedia Editing   பழக வேண்டி இருந்தது. இது சம்பந்தமாக நான் படித்தது இல்லை. முதல்        அனுபவம் என்றே சொல்லலாம்.  பட படப்புடன் செய்வதற்கு ஆரம்பித்தேன் .  Natkeeran  அண்ணா அது பற்றிய       ஒரு அறிமுகத்துகாக link ஒன்று அனுப்பி இருந்தார்.   முதல் தடவை பார்க்கும் போது ஒன்றும் விளங்கவில்லை.                                   விளங்கவில்லை என்றதும் பட படப்பு கூடி விட்டது. ஆனால் செய்து                பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது. மீண்டும் வாசித்தேன் , சிறிதளவு தான் விளங்கியது. இப்படி ஒரு 5        ...

வேலை முதல் நாள் அனுபவம்

Image
மதிய சாப்பாட்டை உண்ட களைப்பில் விறாந்தையில் சாய்ந்து கிடந்தபடி அம்மாவுடன் ஊர்க்கதை கதைத்துக் கொண்டிருந்தபோது என் அலைபேசி அலர ஆரம்பித்தது. யார் இந்த நேரத்தில் என்ற இயல்பான சலிப்போடு எழும்பிப்போய் அலைபேசியை எடுத்து காதில் வைத்தேன். ஆடி போய் ஆவணி வந்தால் நல்ல காலம் பிறக்கும் என்று பழசுகள் கூறுவதுபோல் ஆவணி மாதம்தொடக்கம் வேலை என்று இனிமையான செய்திகேட்டு திண்ட களைப்பு நிங்கி சந்தோசத்தில் திண்டாடினேன். நூலக நிறுவனத்தில் ஆவணிமாதம் முதலாம் திகதி தொடக்கம் எனக்கு வேலை என்று தொலைபேசியில் உறுதிசெய்யப்பட்டது. வீட்டில் அனைவருக்கும் துள்ளித்துள்ளிச் சொல்லித்திரிந்தேன். ஆவணி முதலாம் திகதி அதிகாலை 5 மணிக்கே எழும்பி அவசர அவசரமாய் ஆயத்தமானேன். நாற்காலியில் உட்கார்ந்து உணவு உண்ண முடியாமல் வாசலில் நின்றபடியே சாட்டுக்கு சாப்பிட்டுவிட்டு பேருந்து தரிப்பிடம் நோக்கி பரபரவென நடந்தேன். எனக்காகவே காத்திருந்த பேருந்துபோல் சற்றும் பிந்தாமல் உடனே வந்தது யாழ்ப்பாணம் நோக்கிச்செல்லும் பேருந்து. அத்தனை வேகமாய் வரும் பேருந்தை என் ஒற்றைக் கட்டைவிரலால் நிறுத்திவிட்டேன் என்று மனதிற்குள் மார்தட்டிக்கொண்டு லாவகமாய் தொற்றி...

நூலக நிறுவனம் - ஓர் அறிமுகம்

நூலகம் திட்டம் என்பது ஈழத்து தமிழ் நூல்களையும் எழுத்தாவணங்களையும் மின்வடிவில் இணையத்தில் பேணி வைப்பதற்கான இலாப நோக்கற்ற ஒரு தன்னார்வக் கூட்டுழைப்பாகும். பொருளடக்கம்     •    1 நோக்கங்கள்     •    2 திட்டச் செயற்பாடுகள்     2.1 நூலகம் குழு     2.2 நூற் தெரிவு     2.3 பதிப்புரிமை     •    3 திட்ட வரலாறு    3.1 முதல் முயற்சிகள்    3.2 நூலகம் திட்டம்     •    4 இவற்றையும் பார்க்கவும்     •    5 வெளி இணைப்புக்கள் நோக்கங்கள்     •    ஈழத்து நூல்களையும் எழுத்தாவணங்களையும் அழிவிலிருந்து காப்பதும், ஆவணப்படுத்துவதும், அடுத்ததடுத்த தலைமுறைகளுக்கும் கிடைக்கக்கூடியதாகப் பேணுதலும்.     •    ஈழத்து நூல்களை இலகுவாக , இலவசமாக இணையத்திற் படிக்க, உசாத்துணைப் பாவனைக்குப் பயன்படுத்தத் தக்கதாக கிடைக்கச்செய்த...