Wikipedia Editing முதல் அனுபவம்

   

                        Wikipedia

 Wikipedia Editing (13.08.2018,  MONDAY)

  Natkeeran  அண்ணா ஒரு project தந்து இருந்தார். அது சம்பந்தமாக Wikipedia Editing
  பழக வேண்டி இருந்தது. இது சம்பந்தமாக நான் படித்தது இல்லை. முதல்        அனுபவம் என்றே சொல்லலாம்.
 பட படப்புடன் செய்வதற்கு ஆரம்பித்தேன் .  Natkeeran  அண்ணா அது பற்றிய       ஒரு அறிமுகத்துகாக link ஒன்று அனுப்பி இருந்தார். 
 முதல் தடவை பார்க்கும் போது ஒன்றும் விளங்கவில்லை.                                   விளங்கவில்லை என்றதும் பட படப்பு கூடி விட்டது. ஆனால் செய்து                பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது.
மீண்டும் வாசித்தேன் , சிறிதளவு தான் விளங்கியது. இப்படி ஒரு 5                        தடவைகள் பார்த்ததின்  பின்பே விளங்கியது. இதில் இருந்து ஒன்று                    விளங்கியது, தெரியாத ஒன்றை முதல் தடவை படிக்கின்ற போது                    விளக்கம் இருக்காது. ஆனால் ஆர்வமாக எத்தனை தடவை படிக்கின்றோமோ அதில் தான் நமது வெற்றி தங்கி இருக்கும். அதை தான் விடாமுயற்சி என்பார்கள்.
இறுதியில் அதை பற்றி அறிந்து அவற்றில் சிறு குறிப்பு எடுத்து கொண்டேன்.


Wikipedia test page create (14.08.2018, TUESDAY)

  Wikipedia page create பண்ணுவதற்கு முன்  Stephen Hawking இன் wiki page ஐ பார்த்தேன். அது எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை கவனித்து கொண்டேன். அதன் பின்பே create பண்ணுவதற்கு ஆரம்பித்தேன். 
   
முதலில் எனக்கான கணக்கை Wikipedia page இல் திறந்து கொண்டேன்.
பின் குறித்து வைத்த சிறு குறிப்பை பின் பற்றி edit செய்வதற்கு ஆரம்பித்தேன்.
Sample wiki page  ஒன்றை Stephen Hawking இன் பெயரில் செய்து கொண்டேன்.
மனதில் ஒரு ஆனந்தம் . ஒன்றும் தெரியாமல் இருந்து ஆரம்பித்து செய்து முடித்ததை நினைக்கும் போது ஆனந்தமாக இருந்தது. ஒன்று, இரண்டு குறைவாக இருந்தாலும் செய்து முடித்ததை எண்ணி மனம் நிறைவாக இருந்தது

செய்து முடித்த ஆனந்தத்தில் link ஐ Natkeeran  அண்ணாவிற்கு mail ல் அனுப்பி வைத்தேன். அனுப்பி வைத்த பின்பும் மனதில் பட படப்பு குறைய வில்லை . அவர் என்ன சொல்ல போகின்றார் என்ற கேள்வி மனதில் வந்து வந்து சென்று
கொண்டிருந்தது.


Wikipedia Template editng (15.08.2018, WEDNESDAY)


அடுத்த நாள் காலையில்  Wikipedia  பற்றி மேலும் அறிந்து சிறு குறிப்பு எடுத்து கொண்டிருந்தேன். அப்போது Natkeeran  அண்ணாவிடம் இருந்து அலைப்பு வந்திருப்பதாக Somaraj Sir அழைத்தார்.  பட படப்பு  நிறைந்த மனதுடன் குடு குடு என தொலைபேசியை நோக்கி வந்தேன். அவர் எனது Page நன்றாக உள்ளதாக கூறினார். பின்பு அடுத்த வேலைகள் தந்தார். Wikipedia Template editng  செய்து அனுப்புமாறும் மற்றும் linux பற்றி தெரிந்து கொள்ள  kaniyam.com  என்ற Link உம்    மற்றும் Python பற்றி படிக்குமாறும் கூறிச்சென்றார்.

 இன்று புதிய அடுத்த வேலையை மெல்ல ஆரம்பித்தேன். முதலில் அதை பற்றிய குறிப்புக்களை எடுத்து கொண்டு பின்பு செய்ய தொடங்கினேன்.
அன்றைய நாள் முழு வேலையையும் முடிக்காது விட்டாலும் 1/2 பங்கு வேலை முடிந்து கொண்டது.
பின்பு 4 மணி அளவில் கார்த்திகா அக்காவின் பிறந்த நாள் கொண்டாட்டம் இடம்பெற்றது. Cake வெட்டி புகைப்படங்கள் எடுத்து கொண்டோம்
.

Wikipedia Template editng and linux (16.08.2018, THURSDAY)

   அடுத்த நாள் காலையில்  மீதி Template editng வேலையை செய்து முடித்து அதன்  Link ஐயும் Natkeeran  அண்ணாவிற்கு அனுப்பி வைத்தேன்.
 பின்பு  linux பற்றி Kaniyam.com ல்  பாகம் 1 ல் தேடி கற்று அதை பற்றி அறிந்து கொண்டேன். அதை பற்றி குறிப்புக்கள் சில எடுத்துக்கொண்டேன்.


Blog Create & Wiki Template Points (17.08.2018, FRIDAY)

இன்று காலையில் வழக்கம் போல் சென்று எனது வேலையை இனிதே ஆரம்பித்து செய்து கொண்டிருந்தேன். One Week செய்த வேலைகளையும் மற்றும்  நடந்த நிகழ்வுகளையும் Blog ல்  Update செய்து கொண்டேன். Python பற்றி சிறு குறிப்பு எடுத்து கொண்ருந்த வேளை புதிய குரல் ஒன்று காதின் ஓரத்தில் கேட்டது. திரும்பிய போது புது முகம் ஒன்றை பார்த்தேன் . அவ் நபர் Somaraj Sir உடன் உரையாடிக்கொண்ட வண்ணம் இருந்தார்.
 பின் சிறிது நேரம் கழித்து புதிதாய் வந்து சேர்ந்த Staffs ஐ வருமாறு அழைப்பு வந்தது. நானும், ஜெயமேரி அக்காவும் சென்றோம்.

இருவரும் நடுங்கிய வண்ணம் அந்த புது முகத்தை காண சென்றோம்.
ஆஆ  ,  ஆனந்தம். நாங்கள் பயப்பட்டது  வீண் எனற அளவிற்கு இருவரின் மனதிலும் பட்டது. மிகவும் நன்றாக கதைத்தார்.
 அந்த நபர் யாராக இருக்கும் என நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டுமா???
 அவரின் பெயர் தான் சேரன்.
முழுப்பெயர்-  சிவானந்தமூர்த்தி சேரன்.
(One of the director of  Noolaham foundation.)






Comments

Popular posts from this blog

Post - 27

01.10.2018 To 22.10.2018

பிள்ளைகளின் எதிர்காலம் பெற்றோர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. - கட்டுரை