வேலையின் முதல் மாத அனுபவம்





காலை வணக்கம் நண்பர்களே,

நான் வேலையில் சேர்ந்து ஒரு மாதம் முடிவடைந்துவிட்டது.
இன்று நான் எனது முதல் மாத அனுபவத்தை உங்களுடன் பகிர உள்ளேன்.எனவே இந்த ஒரு மாத காலத்திற்குள் நான் என்ன பயன் அடைந்துள்ளேன் என சொல்ல விரும்புகின்றேன்.அதுமட்டுமின்றி இந்த நூலக சேவையின் பயனை எல்லோருக்கும் தெரியப்படுத்தும் முகமாக எழுத உள்ளேன்.

வந்து ஒரு மாத காலத்தில் நிறைய அனுபவத்தை கற்று கொண்டு விட்டேன்.
என்னை பொருத்தவரை மிகவும் அற்புதமான வேலை தளம். உண்மையில்
இந்த வேலைத்தளம் பற்றியும் அவர்கள் என்ன செய்கின்றார்கள் எனவும் அனேகமானவர்களிற்கு தெரியாது.
ஆனால் ஒரு காலத்தில் இதன் சேவை யாழ் முழுதும் தெரிய வரும் என்பதற்கு ஒரு துளி சந்தேகமும் இல்லை.

முதற்கண் என்னை இந்த தளத்திற்கு அறிமுகப்படுத்திய Harichandran Sir அவர்களிற்கு எனது நன்றியை கூற கடமைப்பட்டுள்ளேன்.
இதற்கு நான் தகுதி உடையவர் என நம்பி என்னை இதற்குள் பணி புரிய வைத்ததன் முகமாக இந்த நன்றியை செலுத்துகின்றேன்.
அது மட்டுமின்றி எனது Blog ஐ இன்னும் மேம்படுத்தும் முகமாக எனக்கு
ipad ஒன்றை அன்பளிப்பு செய்து இருந்தார்.
இது எனக்கும் எனது படிப்பிற்கும் மிகவும் உதவிகரமானதாக இருக்கின்றது.
மிக்க நன்றி Sir

அடுத்ததாக Natkeeran Anna அவர்களிற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு உள்ளேன்.
என்னை மிகவும் நன்றாக வழி நடத்தி செல்கின்றார். உண்மையில் ஆரம்பத்தில் Natkeeran Anna உடன் கதைக்க பயந்து கதைத்தேன். விளங்க வில்லை என்று சொன்னால் ஏசுவாரோ? என்ற அச்சம் இருந்தது. ஆனால் அது பிழை என்று சில காலங்களில் அறிந்து கொண்டேன்.
மிகவும் அன்பான Anna. தெரியாத விடயங்களை நன்கு சொல்லித்தருவார். பாடம் சம்பந்தமாக புது புது விடயங்களை அறிய கூடியதாக இருக்கின்றது.
மிக்க நன்றி அண்ணா.

அடுத்து சொல்ல வேண்டுமானால் Maneger,
அவரின் பெயர் சோமராஜ் (CO)

எங்கள் அனைவரையும் வழி நடத்தி செல்கின்றார். ஒரு தேவை ஏற்படின் அதை பூர்த்தி செய்து வைக்கும் பொறுப்புடன் செயற்படுவார்.

பணிபுரிபவர்கள்

இங்கு என்னை விட அனைவருமே வயதில் மூத்தவர்கள். ஆனால் அந்த வேறுவாட்டை ஒரு நாளும் எனக்கு காட்டியது இல்லை. எல்லோரும் ஒற்றுமையாக அன்பாக பழகினார்கள்.
 நான் 01.08.2018 வேலையில் சேர்ந்தேன். முதல் 6 நாட்கள் எனக்கு இவர்களுடன் இவர்களின் வேலையை  புரியும் சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த 6 நாட்களில் இந்த வேலையின் பெறுமதியும் அதன் கஷ்டத்தையும் அறிய ஒரு வாய்ப்பாக இருந்தது.
வெளியில் இருந்து பார்ப்பவர்களிற்கு இது சுகமான வேலையாக இருக்கலாம் . ஆனால் இந்த system மிகவும் கடினமான ஒன்று.

உதாரணமாக , ஒரு புத்தகத்தை எடுத்தோமானால்,


  • அதை பிரித்து ஒவ்வொரு இதழாக கவனமாக எடுத்து அதை மின் வருடுவார்கள். ஒரு நாளில் 450 பக்கங்கள் மின் வருடப்பட வேண்டும்.
  • பின்பு அவற்றை pdf ஆக்கி checking செய்வார்கள்.ஏறத்தாழ  1500 பக்கங்கள் ஒரு நாளில் செய்வார்கள்.
  • அதன் பின் ஒவ்வொரு ஆவணத்திற்கும் கட்டுரை இணைத்து அதை வலைத்தளத்தில் பதிவேற்றுவார்கள்.

ஒவ்வொரு பணியாளரும் அற்பணிப்புடன் தமது வேலைகளை செய்து வருவதால் மட்டுமே சிறப்புடன் இந்த சேவை இயங்கி வருகின்றது.
இலட்சக்கணக்கான புத்தகங்கள்,சஞ்சிகைகள் , பத்திரிகைகள் .. என பல தரப்பட்டவற்றை pdf  ஆக்கி பாதுகாத்து வருகின்றனர்.
இதன் பெறுமதி ஒரு காலத்தில் தெரியவரும்.

இந்த 6 நாட்கள் நான்  checking செய்தேன். 
அதன் பின் Natkeeran Anna எனக்கு  programming site ல் வேலைகளை தர தொடங்கினார். 
முதலில் Anna  எனக்கு wiki editing செய்யுமாறு கூறி இருந்தார். "கூத்து" என்ற பெயரில் ஒரு portal create பண்ண சொல்லியிருந்தார்.
நான் அறியாத ஒன்று( wiki editing). முதல் அனுபவம் என்றே சொல்லலாம். 
அதன் பின்பு python , mysql , apache என்று பல படித்து அறிந்து கொண்டேன். 

இன்று வரை அவரின் வழி நடத்தலின் படி சென்று கொண்டிருக்கின்றேன்.
பல தரப்பட்ட அறியாத விடயங்களை அறிந்து கொண்டு வருகின்றேன்.

சிறப்பு கொண்டாட்டங்கள்.

அது மட்டுமன்றி பிறந்த நாள் , தைப்பொங்கள் என கொண்டாட்டங்களும் சிறப்பாக நடை பெறும்.
Cake Cut பண்ணி புகைப்படங்கள் எடுத்து என சிறப்பித்து செய்வார்கள்.
தைப்பொங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. பெண்கள் சேலை அணிந்தும் ஆண்கள் வேஷ்டி சட்டை அணிந்தும் அன்றைய தினம் சிறப்பாக தோற்றமளிப்பார்கள்.
பின் பொங்கல் பொங்கி உண்போம்.



இவ்வாறே எனது முதல் மாத காலம் சென்று வந்தது. 
நான் எனது அனுபவத்தை பகிர விரும்புவதை விட இப்படி ஒரு சேவை கொக்குவில் வீதி , ஆடியபாதம் ல் இயங்கி

வருவதை உங்கள் எல்லோருக்கும் தெரியப்படுத்த விரும்பினேன். அதன் முகமாக இந்த Blog ஐ எழுதியுள்ளேன்.





எங்கள் வேலைத்தள முகவரி -

       No-185,
       ஆடியபாதம் வீதி,
       கொக்குவில்

மற்றும் எமது வேலைத்தள புகைப்படங்கள் சில.





































Comments

Popular posts from this blog

Post - 27

01.10.2018 To 22.10.2018

பிள்ளைகளின் எதிர்காலம் பெற்றோர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. - கட்டுரை