01.10.2018 To 22.10.2018


 வணக்கம் நண்பர்களே,
        மன்னிக்கவும் , சிறிதளவு வேலை காரணமாக என்னால் சில நாட்கள் தொடர முடியவில்லை. இன்று மீண்டும் தொடருவோம்.

      நான் இந்த மாத காலத்தில் தெரியாத பல விடயங்கள் படித்திருந்தேன்.
மற்றும் எனது வழமையான வேலையான  Auto முறையில் கட்டுரைகள் இணைத்தலையும் தொடர்ந்து வந்தேன். இப்போது என்ன புது விடயங்கள் கற்று வந்தேன் என பார்ப்போம்.

    இந்த மாதத்தின் முதல் 2 நாட்கள் Auto முறையில் கட்டுரைகள் இணைத்தலில் ஈடுபட்டு வந்தேன். பின் ஒரு நாள் Natkeeran அண்ணா call பண்ணி புதிய வேலை ஒன்று தந்து சென்றார்.
     எனது Lap ல் Drupal-8 பதிவிறக்கம் செய்யுமாறு கூறினார். அது வரையில் Drupal என்றால் என்ன என்றே நான் அறியவில்லை.
    பின் youtube ல் Drupal பற்றிய video க்களை பார்த்து சற்று அறிந்து கொண்டேன்.
பின் பதிவிறக்குவதற்கு  youtube ல் video ஒன்றை பார்த்து அதன் படி செய்து வந்தேன். அந்த  video ல் வழி நடத்தி சென்ற போல எல்லாம் சரியாக வந்துகொண்டிருந்தது. நானும் சந்தோசத்தில் இருந்தேன். ஆனால் கடைசியில் localhost ல் Run பண்ணுகின்ற போது 404  Eror வந்தது.
இவ்வாறு 2 நாட்கள் முயற்சி செய்தும் வரவில்லை. கடைசியில் Natkeeran அண்ணாவிடமே கேட்போம் என முடிவுக்கு வந்தேன்.
அண்ணாவிடம் கேட்பதற்கு முதல் நாள் இன்னொரு முறை முயற்சி செய்து பார்த்தேன். ஆகா. என்ன ஆச்சரியம் . இந்த தடவை வந்து விட்டது.
அடுத்த நாள் Natkeeran அண்ணாவிற்கு சரிவந்து விட்டதாக கூறினேன்.


 அண்ணா அடுத்த வேலை தந்தார். அதாவது Create Cover Page.py Script link ஒன்று அனுப்பி அதனை பார்க்குமாறு கூறி சென்றார். மற்றும் vakeesan அண்ணா பிலோஜினி அக்காவிற்கு Auto முறையில் கட்டுரைகள் இணைப்பது பற்றி விளங்கப்படுத்தி விடுமாறும் கூறினார்.
   அதன்படி பிலோஜினி அக்காவிற்கு அவற்றை பற்றி விளங்கப்படுத்தினேன்.
பின்  Natkeeran அண்ணா தந்த Script ஐ படிக்க தொடங்கினேன். இவற்றுக்கிடையில் Auto முறையில் கட்டுரைகளையும் இணைத்து வந்தேன்.
மற்றும்  Natkeeran அண்ணா  Github பற்றி Staff அனைவருக்கும்  ஒரு விளக்கம் அளிக்குமாறு கூறி இருந்தார். அதற்கு ஒரு Slide செய்து கொண்டேன்.இந்த மாதம் Monthly Meeting ல் அதனை காட்சிப்படுத்தி விளங்கப்படுத்த உள்ளேன்.

சில நாட்களின் பின்   Natkeeran அண்ணா எடுத்து அந்த Code இனை விளங்கப்படுத்தி அதனை Run பண்ணி காட்டினார். அந்த Code ஆனது அட்டைப்படம்  Create பண்ணுவதற்கானது ஆகும். பின் uploadCoverPage.py Script உம் செய்து பார்க்குமாறு கூறி சென்றார். அதவது இது உருவாக்கிய அட்டைப்படங்களை upload செய்வதற்கான Code ஆகும். அதனை நான் செய்து பார்த்தேன் சரியாக வந்தது. அதை Photo எடுத்து  Natkeeran அண்ணா  விற்கு Mail அனுப்பினேன். நன்றாக இருக்குமாறு கூறினார்.
பின் அவர் அனுப்பிய Script  ற்கான Proposal செய்து தருமாறு கூறி இருந்தார். அதனை தனக்கும் vakeesan அண்ணாவிற்கும் அனுப்பி விடுமாறு கூறினார். அதன் படி செய்து முடித்த பின் இருவருக்கும் அனுப்பி விட்டேன். அதில் சில மாற்றங்கள் செய்யுமாறு  Natkeeran அண்ணா Mail போட்டிருந்தார். அவற்றிற்கு இணங்க மாற்றி அமைத்தேன்.

பின் வாகீசன் அண்ணா Optimize பற்றி சிறு விளக்கம் ஒன்று documentation ல் செய்து தருமாறு Mail போட்டிருந்தார். அதன் படி செய்து அவரிற்கும் அனுப்பி இருந்தேன்.

 பின்  Natkeeran அண்ணா அவர் அனுப்பி இருந்த Scripts  களிற்கும் விளக்கம் அளித்து ஒரு documentation  அனுப்புமாறு கூறி இருக்கிறார்.
தற்பொழுது அந்த வேலையிலே ஈடுபட்டு கொண்டு இருக்கின்றேன்.

இன்று இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றேன்.

  
       

Comments

Popular posts from this blog

Post - 27

பிள்ளைகளின் எதிர்காலம் பெற்றோர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. - கட்டுரை