வேலையின் முதல் மாத அனுபவம்
காலை வணக்கம் நண்பர்களே, நான் வேலையில் சேர்ந்து ஒரு மாதம் முடிவடைந்துவிட்டது. இன்று நான் எனது முதல் மாத அனுபவத்தை உங்களுடன் பகிர உள்ளேன்.எனவே இந்த ஒரு மாத காலத்திற்குள் நான் என்ன பயன் அடைந்துள்ளேன் என சொல்ல விரும்புகின்றேன்.அதுமட்டுமின்றி இந்த நூலக சேவையின் பயனை எல்லோருக்கும் தெரியப்படுத்தும் முகமாக எழுத உள்ளேன். வந்து ஒரு மாத காலத்தில் நிறைய அனுபவத்தை கற்று கொண்டு விட்டேன். என்னை பொருத்தவரை மிகவும் அற்புதமான வேலை தளம். உண்மையில் இந்த வேலைத்தளம் பற்றியும் அவர்கள் என்ன செய்கின்றார்கள் எனவும் அனேகமானவர்களிற்கு தெரியாது. ஆனால் ஒரு காலத்தில் இதன் சேவை யாழ் முழுதும் தெரிய வரும் என்பதற்கு ஒரு துளி சந்தேகமும் இல்லை. முதற்கண் என்னை இந்த தளத்திற்கு அறிமுகப்படுத்திய Harichandran Sir அவர்களிற்கு எனது நன்றியை கூற கடமைப்பட்டுள்ளேன். இதற்கு நான் தகுதி உடையவர் என நம்பி என்னை இதற்குள் பணி புரிய வைத்ததன் முகமாக இந்த நன்றியை செலுத்துகின்றேன். அது மட்டுமின்றி எனது Blog ஐ இன்னும் மேம்படுத்தும் முகமாக எனக்கு ipad ஒன்றை அன்பளிப்பு செய்து இருந்தார். இது எனக்கும் எனது படிப்பிற்கும் மிகவ...