Post -23


ஶ்ரீ அருள்மிகு வல்லிபுர ஆழ்வார் ஆலயம்



ஆலய முன் தோற்றம்



     வல்லிபுரம் ஆழ்வார் ஆலயம் இலங்கையின் வட மாகணத்திலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியிலுள்ள வல்லிபுரம் எனும் ஊரில் உள்ள பிரபலமான விஷ்ணு ஆலயம் ஆகும்.

இவ் ஆலயத்தின் மூல மூர்த்தியாக விஷ்ணுவின் சுதர்சனச் சக்கரம் உள்ளது.

சுதர்சனச் சக்கரம்


     ஆர்ப்பரிக்கும் கடலோசை, வெள்ளை மணற்பரப்பு, பசுமையை கொடுக்கும் விருட்சங்கள் என்று இயற்கை அன்னை அரவணைக்கும் ஒரு கோவிலாக ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயம் விளங்குகின்றது.

வரலாற்றுப் பெருமை கொண்ட இவ்வாலயம் மூர்த்தி தலம்,தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கமையப்பெற்ற புராதன தலமாகும்.

இக் கோவிலுக்கென ஐதீகக் கதை ஒன்று உள்ளது.

ஐதீகக் கதை,

     ஆழ்வார் ஆலயத்தின் ஐதீக வரலாறு அற்புதமானது, அதாவது தற்போது இக் கோவிலின் தீர்த்த உற்சவம் நடைபெறும் வங்கக் கடல் பகுதியிலே அதிசயமான மச்சமொன்று துள்ளிக்குதித்ததாகவும்,  அது ஆரவாரம் செய்து மக்களை அதிசயத்தில் ஆழ்த்தி வந்ததாகவும் கூறப்படுகின்றது. 

கடலோடிகள் அந்த மச்சத்தை பிடிப்பதற்கு எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை.  இவ் வேளையில் வராத்துப் பளையைச் சேர்ந்த நாகசாபம் பெற்ற "லவல்லி" எனப்படும் மீனவப் பெண்ணான வல்லி நாச்சி பயபக்தியுடன் தவமிருந்தாள்.
 அவர் கனவில் தோன்றிய பகவான் சிலவறை கூறி மறுநாள் குறித்த இடத்திற்கு வருமாறு பணித்தார். மறு நாள் காலை அங்கு கப்பலில் உட்கார்ந்து பகவானின் நாமத்தை உச்சரித்தபடி இருந்த வேளையில்,
 அந்த மச்சம் கடலில் இருந்து அவர் மடியில் துள்ளிக் குதித்து அழகிய குழந்தையாக மாறியதாகவும்,

வல்லி நாச்சியின் மடியில் தவழும் மச்சம்



பின்பு மக்கள் கண்ணன் உதித்துள்ளான் என ஆரவாரத்துடன் அக் குழந்தையை பல்லக்கில் வைத்து தூக்கிச் சென்ற வேளையில் ஓர் இடத்தில் பல்லக்கை வைத்து இளைப்பாறினர்.
பின் பல்லக்கைத் தூக்க முயற்சி செய்த போது பல்லக்கு மாயமாக மறைந்ததாகவும் அப்போது அங்கு சக்கரம் ஒன்று தோன்றியதாகவும் கூறப்படுகின்றது.
 எனவே மக்கள் அவ் விடத்திலேயே ஆலயம் ஒன்றை அமைத்து அச் சக்கரத்தை வழிபடத்தொடங்கினார்கள். 

இதுவே இவ் ஆலயத்தின் புராதன ஐதீக கதையாக இன்று வரை செவி வழியாக பேணப்பட்டு வருகின்றது.


திருவிழா,

     புரட்டாதி மாதம் பூரணைத் திதியில் தீர்த்த உற்சவம் நிகழக் கூடிய வகையில் 15 நாட்கள் திருவிழா நடைபெறும்.


தேர் திருவிழா


ஆழ்வார் தேர் திருவிழா காணொளி

16 ஆம் நாள் கடலாடு தீர்த்த உற்சவம் இடம் பெறும்.அடுத்த நாள் பட்டுத்தீர்த்தம் நிகழ்த்தப்படும்..

வங்கக்கடல் தீர்த்த உற்சவம்

வல்லிபுர ஆழ்வார் ஆலய தீர்த்த உற்சவம் காணொளி

மற்றும் இக் கோவிலில் ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும்..






Comments

Popular posts from this blog

Post - 27

01.10.2018 To 22.10.2018

பிள்ளைகளின் எதிர்காலம் பெற்றோர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. - கட்டுரை