Post - 21


இந்துகோவில்-மகாவிஷ்ணு(Antelope Valley)




 
Antelope Valley என்ற இந்து ஆலயமானது 42102 30th Street West, Lancaster, California எனும் இடத்தில் அமைந்துள்ளது.Lancaster என்பது தெற்கு California இன் மேற்கு Mojave பாலைவனத்தின் ஆண்டெலோப் பள்ளத்தாக்கில் உள்ள வடக்கு Los_Angeles_County இல் உள்ள ஒரு நகரமாகும்.
இப்போது Lancaster அமைந்துள்ள பகுதி ஆண்டெலோப் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகின்றது.

Hindu Temple of the Antelope Valley


 
இங்கு மூலஸ்தானத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவர் மகாவிஷ்ணு ஆவார்.



  மேலும்   


  1. அஜித் கணேசா

 

      2.சிவன் பார்வதிதேவி

     

    3. தேவி அகிலாண்டேஷ்வரி

     

     

    4. அனுமன் 

     

    5. ராமர்பரிவாரங்கள்

     

     

    6. கிருஷ்ணர் மற்றும் ராதா

     




    ன்று அழைக்கப்படும் 7 தெய்வங்களின் சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ள பிரசித்தி பெற்ற இந்து ஆலயமாக திகழ்கின்றது.
    இங்கு Ridgecrest,Santa Clarita,Valencia எனும் இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்தளிக்கின்றனர். மற்றும் Florida மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகின்றனர்.
    அனைத்து இந்து ஆலயங்களிலும் 9 நவக்கிரகங்கள் அமைந்திருக்கும். ஆனால் இங்கு நவக்கிரகங்களை வடகிழக்கு பக்கம் தனியே அதாவது அவை Mojave எனும் அழகான பாலைவன உச்சியில் அமைத்துள்ளனர்


                                    9 நவக்கிரகங்கள்


     அது 2-1/2 ஏக்கர் கொண்ட சூழல் ஆகும். அது Joshua மரங்களாலும் ஞானிகளுக்கான இடத்தையும் கொண்டமைந்த இடமாகும்

    மற்றும் இந்த நவக்கிரகங்கள் கிழக்கு திசையை நோக்கி சூரிய உதயத்தை பார்த்த வண்ணம்
    அமைக்கப்பட்டுள்ளது.


    ஆலய தோற்றங்கள்

     இவ் ஆலயம் கட்டப்பட்டு ஐந்து வருடங்கள் ஆன நிலையில் அதனை கொண்டாடும் விதத்தில் இவ் வருடம் அதாவது 2020, வைகாசி மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை அவ் ஆலயத்தின் 5 வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டு விசேட பூஜைகள் இடம் பெற்றது. அதாவது இந்த 7 தினங்களிலும் அங்கு அருள் பாலித்திருக்கும் தெய்வங்களுக்கு மகா ஓமங்களும் மற்றும் அபிசேகங்களும் இடம் பெற்றது.

    நாம் எக்காரியம் தொடங்கும் பொழுதும் விநாயகரை தரிசித்து தொடங்குவது இந்து மதத்தவர்களின் வழக்கம்.

    அதே போல் 21 ஆம் திகதி தொடக்க பூஜையாக விநாயக மற்றும் நவக்கிரக ஓமம் இடம்பெற்று
    ஆரம்பிக்கப்பட்டது. மற்றும் தொடர்ந்து 22 ஆம் திகதி கிருஷ்ண ஓமமும், 23 ஆம் திகதி அகிலாண்டேஷ்வரி ஓமம்,அபிஷேகம் மற்றும் ருத்ர ஓமமும் ,24 ஆம் திகதி மகா விஷ்ணு அபிஷேகமும், 25 ஆம் திகதி ராமபரிவார ஓமமும், 26 ஆம் திகதி ஆஞ்யநேய மூலமந்நிர ஓமம் மற்றும் மகா சுதர்ஷ ஓமமும் , இறுதி நாள் 27 ஆம் திகதி கலா ஓமம் மற்றும் மகா பூஜைகளும் இடம்பெற்றது.


                 ஆனி மாதத்திட்கான பூஜை வழிபாட்டு அட்டவணை



        





    இதன் சுற்றுச்சூழலை கூறுவோமாயின் இக் கோவில் வடக்கே10 ஏக்கர் கொண்ட பச்சைப்பசுமை நிறைந்த இயற்கை அழகு கொண்ட ஒரு பொது பூங்காவால் சூழப்பட்டுள்ளது. இது மேலும் அக் கோவிலை அழகூட்டும் விதமாக எல்லோரலும் விரும்பப்படுகின்றது.

    பெரிய கோபுரத்தின் கீழே மகாவிஷ்ணுவும் சுற்றியுள்ள சிறிய கோபுரங்களின் கீழே ஏனைய 6 தெய்வங்களும் எழுந்தருளி இருக்கின்றன . கீழே உள்ள படத்தில் அதனை காணலாம்




    இன்றைய சமூகத்தில் கிராமங்களில் இந்து சமய பூஜை,புனஸ்காரங்கள் நடைபெற்று வருவது வழக்கமாக இருந்தாலும் சிலர் மட்டுமே வழிபாடுகளுக்கு சென்று வருவதை அனைவரும் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.
    ஆனால் இந்து மதம் வெளி இடங்களிலும் இவ்வாறான வழிபாடுகளுடன் பக்ர்களை ஆலயங்களில் காணக்கூடியாக உள்ளது என்பது இந்து மதத்தின் முக்கியத்தை இன்றைய சமூகத்திற்கு காட்ட கூடியதாக அமைந்திருக்கின்றது.



     written by..
                                               











                                                  

    Rajasekaran Sangeetha.
    working from Noolaham Foundation.
    (technology site staff)
    SriLankan
    contact mail-r.sangeethamail@gmail.com

     


                                                               




    Comments

    Popular posts from this blog

    Post - 27

    01.10.2018 To 22.10.2018

    பிள்ளைகளின் எதிர்காலம் பெற்றோர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. - கட்டுரை