Post - 20

            கொரோனா இணையம்

                                        (இணையமின்றி எதுவுமில்லை)


தற்போது கொரோனா வைரஸ்  உலக நாடுகள்  அனைத்திலும் பரவி வருவது எல்லோரும் அறிந்திருப்பதொன்று.

இந்த நிலைமையில் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கியிருக்க அவர்களின் பிரதான தகவல் தொடர்பு "இணைய சேவை" ஒன்று தான்.
மக்கள் ஒருவரை ஒருவர் பார்க்காது இருக்க வேண்டும் என்பதால் தங்கள் உறவினர்கள், நண்பர்கள், தொழில்கள் தொடர்பான வேலைகள் அனைத்தையும் இணையத்தின் மூலமே தொடர்பு கொள்கின்றனர்.

மற்றும் அனைத்து பாடசாலைகள் , அரசாங்க வேலைகள், தனியார் நிறுகவங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன.

 நூலக நிறுவனம் உட்பட்ட சில தனியார் , அரச நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலைபார்க்கும் வாய்ப்பை அளித்துள்ளது.
அதாவது,
வீட்டில் இருந்தவாறே இணையத்தின் மூலம் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இன்று வீட்டில்முடங்கியிருக்கும் நேரம் அதிகமாக இருப்பதாலும், புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் நாட்டின் அசாதாரண சூழ்நிலை கருதி எதுவும் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

 நீங்கள் புத்தகங்கள் படிக்கும் ஆசை உள்ளவரா? அல்லது பரீட்சைக்கு படிக்கும் மாணவர்களா?

கவலை வேண்டாம், 

உடனே செல்லுங்கள் இணையத்தினூடாக எமது நூலக நிறுவனத்தின் சேவையை பெற்றிடுங்கள். விரும்பிய புத்தகத்தை அல்லது தேவைப்படும் வினாத்தாள்களை வீட்டில் இருந்தவாறே படித்துக்கொள்ளலாம்,
 (85,000 ஆவணங்களைக் கடந்து(சஞ்சிகைகள், தல புராணங்கள், கட்டுரைகள், நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், தன் வரலாற்றுக் குறிப்புகள், கல்வெட்டுக் குறிப்புகள். ஈழத்து நூலகம் இணையக் கருவூலமாகத் திகழ்கின்றது. )



                            website link- noolaham.org

மற்றும் சில கல்வி  சார்ந்த செயற்பாடுகளும் இணையத்தின் மூலமாக நடைபெற்று வருவது வரவேற்கத்தக்கது.

இவ் வருடம் பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்களா?

from noolaham -
 பல்லூடக ஆவணகம் - Multimedia Archive
Example of Past Papers -
 http://aavanaham.org/

 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கை  TV PROGRAM ME  மூலமும், ONLINE CLASS மூலமும் நடைபெற்று வருகின்றது. 

 உதாரணம்-
       மாணவர்கள் வீட்டில் இருந்தே கல்வி கற்பதற்கு வசதியாக ekalvi இணையத்தளத்திற்கு ஒரு YouTube Chanel உருவாக்கியுள்ளனர்.
Devarajan Chelliah மூலமாக
Link -  https://www.youtube.com/channel/UCS-zFdhjPH5h8H7q2YpCfnQ/videos?disable_polymer=1&fbclid=IwAR2HVvu6knVfsy4qvR3iqUh3271xXXTYZpsZyJ9w06dgEodK9qpkE2PbXpE

 எதை எடுத்துப்பார்த்தோமானலும் அங்கு இணையத்தினூடான உதவி எமக்கு தேவை உண்டு.

இணையம் இன்றி எதுவும் இயங்காது.

வளர்ந்துவரும் இணையத்தின் மூலம் மனிதன் அறிவை பெருக்கிக்கொண்டே செல்கிறான்.
நாடுகள் முடக்கப்பட்டு இருந்தாலும் எம் அறிவு முடக்கப்படவில்லை.




























Comments

Popular posts from this blog

Post - 27

01.10.2018 To 22.10.2018

பிள்ளைகளின் எதிர்காலம் பெற்றோர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. - கட்டுரை