ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்,
ஏய உணர்விக்கும் என் அம்மை- தூய
உருப்பளிங்கு போல்வாள், என் உள்ளத்தின் உள்ளே
இருப்பள் இங்கு வாராது இடர்.
இன்று நாம் பார்க்கப்போவது சரஸ்வதி வெள்ளைத்தாமரை மற்றும் வெள்ளை உடை அணிவதற்கான காரணம்......
சரஸ்வதி என்ற சொல்லுக்கு ஆறு எவ்வாறு ஓடுகின்றதோ அதைப்போல அறிவும், ஞானமும் கொண்ட அழகான பெண் என்பதாகும்.
சரஸ்வதி அணிந்துள்ள ஆடையின் மற்றும் அமர்ந்திருக்கும் மலரின் நிறமும் வெள்ளை. வானவில்லின் 7 வண்ணங்களில் சேராத வெள்ளையை சரஸ்வதிக்கு மட்டும் சாத்துவார்.தூய வெள்ளை ஆடை அணிபவர்களுக்கு தனிமரியாதை உண்டு.கற்றவர் மரியாதைக்குரியவர் என்பதை எடுத்துக்காட்டவே, கல்வி தெய்வமான சரஸ்வதியும் வெள்ளை ஆடை அணிந்திருக்கிறாள். வெள்ளை என்பது மாசுமருவற்றது. ஒருவன் கற்ற கல்வியும் மாசு மருவற்றதாக இருக்க வேண்டும் என்பதை இது காட்டுகின்றது.
மலம் என்றால் அழுக்கு. உடலில் உள்ள அழுக்கை மலம் என்கின்றோம். நிர்மலம் என்றால் அழுக்கற்றது தெளிவானது. நன்மையும் தீமையும் கலந்து இருக்கும் இந்த உலகில் அழுக்கே இல்லாத கல்வியைத் தேர்ந்தெடுத்து, கற்க வேண்டும் என்பதையே அவளுக்குரிய வெள்ளைநிறம் உ ணர்த்துகின்றது. வெள்ளை நிறத்தில் மட்டும் ஒளி ஊடுருவும். இதனால்தான் சரஸ்வதி தேவி நிர்மலமான ஸ்படிகத்தால் ஆன மாலையை அணிந்திருக்கிறாள்.
சரஸ்வதிக்கு கலைமகள் என்ற பெயர் உண்டு. கலை என்றால் வளர்வது.கல்வியும் படிக்க படிக்க வளர்ந்து கொண்டே போகும்.தன் வாழ்நாளுக்குள், ஒருவன் எல்லாக் கலைகளையும் கற்று விட முடியாது. இதைத் தான் கற்றது கைம்மண்ணளவு என்பர்.
அதாவது குளத்தில் ஒருவர் தனது இரு கையினாலும் எவ்வளவு நீரை அள்ள முடிகின்றதோ அதுவே அவருக்கான கல்வியின் அளவு என முன்னைய காலங்களில் கூறுவார்கள்.
இதுவே சரஸ்வதிதேவி வெள்ளை நிறத்தில் காட்சிஅளிப்பதற்கான காரணங்கள் ஆகும்.
சுப்பிரமணிய பாரதியார் எழுதிய சரஸ்வதி தேவி கீர்த்தனை பாடல் வரிகள்...
வெள்ளைத்தாமரை பூவில் இருப்பாள்,
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்,
கொள்ளை இன்பம் குலவு கவிதை,
கூறு பாவலர் உள்ளத்திலிருப்பாள்,
உள்ளதாம் பொருள் தேடியுணர்ந்தே,
ஓதும் வேதத்தின் உள்நின்ரொளிர்வாள் ,
கள்ளமற்ற முனிவர்கள் கூறும்,
கருணை வாசகத்துட் பொருளாவாள்.
நூலக நிறுவன வலைத்தளத்திலிருந்து -
http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_(%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D)
வெள்ளைத்தாமரை பூவிலிருப்பாள்... வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்..... (youtube இலிருந்து)
https://www.youtube.com/watch?v=9GjBEzkzMY4
ஆறானது நிற்காமல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அதற்கு எல்லை இல்லை. அதே போல் தான் நமது அறிவும்... அதுவும் எல்லை இல்லாதது.. அணை கட்டி தடுக்க முடியாது...
அறிவு - வலையமைப்பு - நூலகம் இம் மூன்றிற்குமான தொடர்பு என்ன என்று தெரியுமா...
அதாவது நூலகம் என்ற ஒன்று இல்லை என்றால் அறிவு என்ற ஒன்று கிடையாது.. நூலகங்களினூடாக தான் நாம் அறிவை பெருக்கி கொள்ள முடியும்.இது பலருக்கு தெரிந்த உண்மை தான்..
ஆனால் வலையமைப்பு என்ன செய்கிறது என்ற கேள்வி தோன்றலாம்..
இன்றைய காலத்தில் பெரிதாக யாரும் நூலகம் சென்று வாசிப்பதில்லை. காரணம் - நேரம் போதாமை,
ஆனால் இந்த Internet களின் ஊடாக வீட்டிலிருந்தவாறே நீங்கள் நூலகத்தில் உள்ளவற்றை வாசித்துக்கொள்ளும் வசதி வந்து விட்டது....
அது எப்படி என்று பலரின் மனதில் கேள்விகள் எழும்பலாம்....
அதற்கு தான் இலாப நோக்கமற்ற ஒரு நிறுவனமான நூலக நிறுவனம் (NOOLAHAM FOUNDATION ) ஒரு வசதி செய்து வருகின்றது..
அனைத்து புத்தகங்களையும் e - booking and e - learning செய்து மக்கள் வீட்டில் இருந்தவாறே விரும்பிய புத்தகங்களை படித்தோ அல்லது தரவிறக்கம் செய்து எடுத்தோ கொள்ளலாம்..
எமது யாழ்ப்பாண நூலகமானது எரிந்து பல கணக்கான புத்தகங்களை நாம் இழந்த கதை அனைவருக்கும் தெரிந்த ஒன்று...
அப்படி மறுபடியுமோர் சம்பவம் நடந்துவிடக்கூடதென்று அவர்கள் புத்தகங்களை இவ்வாறு E-BOOKING ஆக மாற்றி இலாப நோக்கற்ற நிறுவனமாக கொக்குவில், ஆடியபாதம் வீதியில் தமது நிறுவனத்தை இயக்கி வருகின்றனர்..
இது தற்பொழுது 84000 ஆவணங்களுடன் வெற்றிகரமாக இயங்கி வருகின்றது சிறப்பிக்கத்தக்கது..
Comments
Post a Comment