Post -23
ஶ்ரீ அருள்மிகு வல்லிபுர ஆழ்வார் ஆலயம் ஆலய முன் தோற்றம் வல்லிபுரம் ஆழ்வார் ஆலயம் இலங்கையின் வட மாகணத்திலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியிலுள்ள வல்லிபுரம் எனும் ஊரில் உள்ள பிரபலமான விஷ்ணு ஆலயம் ஆகும். இவ் ஆலயத்தின் மூல மூர்த்தியாக விஷ்ணுவின் சுதர்சனச் சக்கரம் உள்ளது. சுதர்சனச் சக்கரம் ஆர்ப்பரிக்கும் கடலோசை, வெள்ளை மணற்பரப்பு, பசுமையை கொடுக்கும் விருட்சங்கள் என்று இயற்கை அன்னை அரவணைக்கும் ஒரு கோவிலாக ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயம் விளங்குகின்றது. வரலாற்றுப் பெருமை கொண்ட இவ்வாலயம் மூர்த்தி தலம்,தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கமையப்பெற்ற புராதன தலமாகும். இக் கோவிலுக்கென ஐதீகக் கதை ஒன்று உள்ளது. ஐதீகக் கதை, ஆழ்வார் ஆலயத்தின் ஐதீக வரலாறு அற்புதமானது, அதாவது தற்போது இக் கோவிலின் தீர்த்த உற்சவம் நடைபெறும் வங்கக் கடல் பகுதியிலே அதிசயமான மச்சமொன்று துள்ளிக்குதித்ததாகவும், அது ஆரவாரம் செய்து மக்களை அதிசயத்தில் ஆழ்த்தி வந்ததாகவும் கூறப்படுகின்றது. கடலோடிகள் அந்த மச்சத்தை ப...