பிள்ளைகளின் எதிர்காலம் பெற்றோர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. - கட்டுரை
பிள்ளைகளின் எதிர்காலம் பெற்றோர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. வாசிப்பு என்பது அனைத்து வயதினருக்கும் அவசியமானதொன்றாகும். வாசிப்புப் பழக்கமானது ஒருவரின் அறிவு மட்டுமன்றி, தெளிவு, கிரகித்தல், உடனடியாகப் பதிலளித்தல், நாபிறழ்வின்றி சரளமாகக் கதைத்தல், எவர் முன்பும் பதிலளிக்கக் கூடிய துணிவு, சொல்லாண்மை, வசன உருவாக்கம் போன்ற குணங்களை வளர்க்கின்றது. வாசிப்புப் பழக்கத்தைப் புறம்தள்ளிப் போகின்றவர்கள் இலகுவாகச் சரளமாகக் கதைக்கவோ உடனடியாகப் பதிலளிக்கவோ சிரமப்படுகின்றார்கள். ஒரு விடயத்தை, ஒரு கவிதையை, ஒரு நீண்ட வசனத்தை எளிதில் கிரகித்து விளங்கிக் கொள்ளும் தன்மை குறைவாகக் காணப்படுவதற்கும் வாசிப்புப் பழக்கமின்மையே காரணமாகும். ஒரு பிள்ளை கருவிலிருக்கும் போதே தாய் நல்ல புத்தகங்களை வாசிப்பது பயனுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு பிள்ளையின் வாசிப்புப் பழக்கமானது அப்பிள்ளையின் பெற்றோர்களிலேயே தங்கியுள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வாசிப்புப் பழக்கத்தினைச் சிறுபராயத்தில் இருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு பிள்ளையின் வாசிப்புப் பழக்கத்தினை அதிகரித்துக் கொள்வதற்கு...