Uki coding - Library Foundation அனுபவம்
வணக்கம் , எனது பெயர் சங்கீதா இராஜசேகரன் . நான் பருத்தித்துறையில் வசிக்கின்றேன். எனது குடும்ப அங்கத்தவர்கள் எண்ணிக்கை ஐந்து . அக்கா Jaffna university ல் படிக்கின்றார். தம்பி 9 ஆம் வகுப்பு படித்து வருகின்றார். நான் தற்பொழுது Jaffna வில் Noolaham Foundation ல் programming சம்பந்தமான வேலை செய்து வருகின்றேன். நாங்கள் நடுத்தர குடும்ப வர்க்கத்தினர். எனது குடும்பமும் போர் நடந்த கால கட்டத்தில் பாதிப்படைந்த குடும்பங்களில் ஒன்று. அன்றைய போர் நிலையில் எங்கள் சொந்த வீட்டைகூட இழக்க வேண்டி வந்தது. தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகின்றோம். தற்போது அப்பா ஊரில் ஒரு பெட்டிக்கடை ஒன்று நடத்தி வருகின்றார். ஒரு நாளைக்கு 1000 ரூபா வீட்டுக்கு கொடுப்பார். அதில் தான் எங்கள் உணவில் இருந்து உடைகள் வரை அம்மா பார்த்துக்கொள்வார். இந்த கஷ்டமான நிலையிலும் எனது அப்பா மற்றும் அம்மா என்னையும் எனது சகோதரங்களையும் படிப்பித்து இருக்கின்றார்கள். இவ்வளவு கஷ்டத்தின் மத்தியிலும் நாங்கள் படித்து கொண்டு இருக்கின்றோம். இந்த நிலையில் A/L Exam எடுத்து இருந்த போது IT Teacher ஒருவரின் மூலம் Uki என்ன...