Posts

Showing posts from August, 2018

20.08.2018 To 25.08.2018

                 கூத்து portal create Natkeeran அண்ணா அனுப்பி இருந்த நூலகம் link ற்குள் சென்று கூத்து என்ற பெயரில் portal create பண்ண தொடங்கினேன். ஆனால் ஒரு சிக்கல். எனக்கு கூத்து பற்றிய அறிமுகம் இல்லை. ஆதலால் முதலில் கூத்து என்றால் என்ன எனவும் அதை பற்றியும் சில தகவல்களை google it பண்ணி அறிந்து கொண்டேன்.  பின் portal ல் கூத்துக்கான அறிமுகத்தை பதிவு செய்து கொண்டேன்.  வெற்றிகரமாக அதனை செய்து முடித்த பின்பு இன்னும் சில பதிய வேண்டி இருந்தது. அதாவது கூத்து பற்றிய கட்டுரைகள் , நூல்கள், ஆளுமைகள், அமைப்புக்கள் என்பனவும் சேர்க்க வேண்டி இருந்தது. இதை பற்றி எல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாது. ஆனாலும் எனக்கு கவலை இல்லை. ஏன் தெரியுமா... தெரியாத ஒன்றை பற்றி அறிந்து கொள்வதற்கு நம்முடனே இருக்கின்ற ஒரே ஒரு நண்பன் google  .  அவன் இருக்க ஏன் கவலை .   google  பண்ணி  கட்டுரைகள் , நூல்கள் என்பவற்றை அறிந்து எடுத்து பதிவு செய்தேன். ஆனால் ஆளுமைகள் என்றால் என்ன என்று விளங்க வில்லை.  பின்பு மதிய நேரம் சாப்பிட்டுக்கொண்டிருந்த வேளை  Somaraj Sir இடம்  ஆளுமைகள்  பற்றி கேட்டு அறிந்து கொண்டேன். 

Wikipedia Editing முதல் அனுபவம்

                             Wikipedia   Wikipedia Editing  (13.08.2018,  MONDAY)   Natkeeran  அண்ணா ஒரு project தந்து இருந்தார். அது சம்பந்தமாக Wikipedia Editing   பழக வேண்டி இருந்தது. இது சம்பந்தமாக நான் படித்தது இல்லை. முதல்        அனுபவம் என்றே சொல்லலாம்.  பட படப்புடன் செய்வதற்கு ஆரம்பித்தேன் .  Natkeeran  அண்ணா அது பற்றிய       ஒரு அறிமுகத்துகாக link ஒன்று அனுப்பி இருந்தார்.   முதல் தடவை பார்க்கும் போது ஒன்றும் விளங்கவில்லை.                                   விளங்கவில்லை என்றதும் பட படப்பு கூடி விட்டது. ஆனால் செய்து                பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது. மீண்டும் வாசித்தேன் , சிறிதளவு தான் விளங்கியது. இப்படி ஒரு 5                        தடவைகள் பார்த்ததின்  பின்பே விளங்கியது. இதில் இருந்து ஒன்று                    விளங்கியது, தெரியாத ஒன்றை முதல் தடவை படிக்கின்ற போது                    விளக்கம் இருக்காது. ஆனால் ஆர்வமாக எத்தனை தடவை படிக்கின்றோமோ அதில் தான் நமது வெற்றி தங்கி இருக்கும். அதை தான் விடாமுயற்சி என்பார்கள். இறுதியில் அதை பற்றி அறிந்து அவற்

வேலை முதல் நாள் அனுபவம்

Image
மதிய சாப்பாட்டை உண்ட களைப்பில் விறாந்தையில் சாய்ந்து கிடந்தபடி அம்மாவுடன் ஊர்க்கதை கதைத்துக் கொண்டிருந்தபோது என் அலைபேசி அலர ஆரம்பித்தது. யார் இந்த நேரத்தில் என்ற இயல்பான சலிப்போடு எழும்பிப்போய் அலைபேசியை எடுத்து காதில் வைத்தேன். ஆடி போய் ஆவணி வந்தால் நல்ல காலம் பிறக்கும் என்று பழசுகள் கூறுவதுபோல் ஆவணி மாதம்தொடக்கம் வேலை என்று இனிமையான செய்திகேட்டு திண்ட களைப்பு நிங்கி சந்தோசத்தில் திண்டாடினேன். நூலக நிறுவனத்தில் ஆவணிமாதம் முதலாம் திகதி தொடக்கம் எனக்கு வேலை என்று தொலைபேசியில் உறுதிசெய்யப்பட்டது. வீட்டில் அனைவருக்கும் துள்ளித்துள்ளிச் சொல்லித்திரிந்தேன். ஆவணி முதலாம் திகதி அதிகாலை 5 மணிக்கே எழும்பி அவசர அவசரமாய் ஆயத்தமானேன். நாற்காலியில் உட்கார்ந்து உணவு உண்ண முடியாமல் வாசலில் நின்றபடியே சாட்டுக்கு சாப்பிட்டுவிட்டு பேருந்து தரிப்பிடம் நோக்கி பரபரவென நடந்தேன். எனக்காகவே காத்திருந்த பேருந்துபோல் சற்றும் பிந்தாமல் உடனே வந்தது யாழ்ப்பாணம் நோக்கிச்செல்லும் பேருந்து. அத்தனை வேகமாய் வரும் பேருந்தை என் ஒற்றைக் கட்டைவிரலால் நிறுத்திவிட்டேன் என்று மனதிற்குள் மார்தட்டிக்கொண்டு லாவகமாய் தொற்றி

நூலக நிறுவனம் - ஓர் அறிமுகம்

நூலகம் திட்டம் என்பது ஈழத்து தமிழ் நூல்களையும் எழுத்தாவணங்களையும் மின்வடிவில் இணையத்தில் பேணி வைப்பதற்கான இலாப நோக்கற்ற ஒரு தன்னார்வக் கூட்டுழைப்பாகும். பொருளடக்கம்     •    1 நோக்கங்கள்     •    2 திட்டச் செயற்பாடுகள்     2.1 நூலகம் குழு     2.2 நூற் தெரிவு     2.3 பதிப்புரிமை     •    3 திட்ட வரலாறு    3.1 முதல் முயற்சிகள்    3.2 நூலகம் திட்டம்     •    4 இவற்றையும் பார்க்கவும்     •    5 வெளி இணைப்புக்கள் நோக்கங்கள்     •    ஈழத்து நூல்களையும் எழுத்தாவணங்களையும் அழிவிலிருந்து காப்பதும், ஆவணப்படுத்துவதும், அடுத்ததடுத்த தலைமுறைகளுக்கும் கிடைக்கக்கூடியதாகப் பேணுதலும்.     •    ஈழத்து நூல்களை இலகுவாக , இலவசமாக இணையத்திற் படிக்க, உசாத்துணைப் பாவனைக்குப் பயன்படுத்தத் தக்கதாக கிடைக்கச்செய்தல்     •    ஆய்வு நோக்கங்களுக்காக இணைய தேடுபொறிகளில் தேடல்கள் நிகழ்த்துவோர், தமிழ் தேடல்கள் மூலம் ஈழத்து நூல்களைக் கண்டடைய, அந்நூல்களின் உள்ளடக்கத்தைப் பெற்றுக்கொள்ள வழி செய்தல். திட்டச் செயற்பாடுகள் நூலகம் குழு இத்திட்டத்தின் செயற்பாடுகள் திறந்த நிலையில் ஒழுங்