Posts

Showing posts from July, 2020

Post - 24

தானியங்கி கடித முறை உருவாக்கம் வணக்கம், இன்று தானியங்கி கடித முறை உருவாக்கம்(Script) பற்றி பார்ப்போம். நோக்கம் (Purpose of the Document) நூலக நிறுவனத்திற்கு நன்கொடைகள் வழங்கும் புரவலர்களுக்கு நன்றி கடிதம் அனுப்பும் செயல்பாட்டை மேம்படுத்தும் முகமாக தானியங்கி மூலமாக அனுப்ப வேண்டிய நன்றிக் கடித PDF ஐ உருவாக்குதல், மற்றும் அதை புரவாளர்களின் மினனஞ்சலுக்கு அனுப்பும் முறையை இற்றைப்படுத்த இவ் ஆவணம் உருவாக்கப்பட்டுள்ளது நன்மைகள் (Benefits) நேரம் மிகுதியாக்கப்படும்: கடித உருவாக்கம் மற்றும், மின்னஞ்சல் அனுப்பும் நேரங்கள் மிகுதியாக்கப்படும். ஒரு Template கடிதத்தை மட்டும் வைத்து, சரியான முறையில் மின்னஞ்சல் அனுப்பப் பயன்படும். செயன்முறை விளக்கம் ஒவ்வொரு புரவலர் பெயராகவும், அவர் அளித்த அன்பளிப்பு தொகையையும்,  அவர்களின் மின்னஞ்சலையும்  குறித்த ஒரு மீதரவு தாளில் (metadata sheet) ல் பதிந்து சேமித்து வைப்பதன் மூலம், தானியங்கி script அதர்கேற்றார் போல் அவர்கள் பெயரையும், தொகையையும் குறிப்பிட்டு PDF கோப்பினை உருவாக்கி அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப் கூடிய செயன்முறையை உருவாக்கும் திட்டம் இதுவாக

Post -23

Image
ஶ்ரீ அருள்மிகு வல்லிபுர ஆழ்வார் ஆலயம் ஆலய முன் தோற்றம்      வல்லிபுரம் ஆழ்வார் ஆலயம் இலங்கையின் வட மாகணத்திலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியிலுள்ள வல்லிபுரம் எனும் ஊரில் உள்ள பிரபலமான விஷ்ணு ஆலயம் ஆகும். இவ் ஆலயத்தின் மூல மூர்த்தியாக விஷ்ணுவின் சுதர்சனச் சக்கரம் உள்ளது. சுதர்சனச் சக்கரம்      ஆர்ப்பரிக்கும் கடலோசை, வெள்ளை மணற்பரப்பு, பசுமையை கொடுக்கும் விருட்சங்கள் என்று இயற்கை அன்னை அரவணைக்கும் ஒரு கோவிலாக ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயம் விளங்குகின்றது. வரலாற்றுப் பெருமை கொண்ட இவ்வாலயம் மூர்த்தி தலம்,தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கமையப்பெற்ற புராதன தலமாகும். இக் கோவிலுக்கென ஐதீகக் கதை ஒன்று உள்ளது. ஐதீகக் கதை,      ஆழ்வார் ஆலயத்தின் ஐதீக வரலாறு அற்புதமானது, அதாவது தற்போது இக் கோவிலின் தீர்த்த உற்சவம் நடைபெறும் வங்கக் கடல் பகுதியிலே அதிசயமான மச்சமொன்று துள்ளிக்குதித்ததாகவும்,  அது ஆரவாரம் செய்து மக்களை அதிசயத்தில் ஆழ்த்தி வந்ததாகவும் கூறப்படுகின்றது.  கடலோடிகள் அந்த மச்சத்தை பிடிப்பதற்கு எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை.  இவ் வேளையி