மரபுரிமைகளைத் தேடி..._ நூலக நிறுவனம்
மறைந்த ஈழத்து ஆவணங்களை நோக்கி...நமது நூலக நிறுவனம் நடாத்தும் மரபுரிமைகளை தேடி.
(ஆவணப்படுத்தல், ஓலைச்சுவடிகள் கண்காட்சியும் )
எமது வரலாறுகள் , அடையாளங்கள் அழிவடைந்தும் மறைக்கப்பட்டும் வருகின்ற நிலையில் ஆவணப்படுத்தல் என்பது மிக முக்கியமானது.அத்தகைய ஆவணப்படுத்தல் என்பதை மேற்கொண்டு இதனூடாக எமது இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்த வரலாறுகளை எடுத்துச் செல்ல வேண்டும்.
குறிப்பாக எமது இளைய தலைமுறையினர் இவற்றை செய்ய முன்வருதல் அவசியமானது.
நூலக நிறுவனமானது 15 வருட காலமாக ஈழத்து தமிழ் பேசும் சமூகத்தினை எண்ணிம வடிவில் ஆவணப்படுத்தும் பணியில் 84000 ஆவணங்களை ஆவணப்படுத்தியுள்ளனர்.குறித்த ஆவணங்களில் தெரிவு செய்யப்பட்ட அரிய வகை ஆவணங்கள் கண்காட்சியில் ஆவணப்படுத்தப்பட்டது.
பத்திரிகைகள், ஓலைச்சுவடிகள் , சஞ்சிகைகள் , நினைவுமலர்கள் ஆகிய அச்சிடப்பட்ட ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அத்துடன் சுவடிகள் மின்வருடி ஆவணப்படுத்தும் முறைமை, நூலக இணையத்தளங்களை கையாளும் வழிமுறைமை, வாய்மொழி வரலாறு செயற்பாடுகள், தொழிற்சாலைகள் ஆவணப்படுத்தல். ஆகிய வகையான கண்காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டன.
கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வுகள் 22.02.2020 அன்று ஆரம்பமாகியதுடன் அதில் நூலக நிறுவன இயக்குனர்களான கோபிநாத், சேரன் மற்றும் மயூரநாதன் அவர்களும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். நூலக நிறுவனத்திற்கு ஆவணங்களை தந்து உதவியோர் கெளரவிக்கப்பட்டனர். தொடர்ச்சியாக மரபுரிமைகளை ஆவணப்படுத்தல் நிகழ்வுகளும் இரண்டு தினங்களும் நடைபெற்றது.
தொடர்ந்து ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களை கொண்டமைந்த எமது புத்தகங்களின் விற்பனை நிலையமும் கண்காட்சியில் இடம்பெற்றது.
மற்றும் இப் பணியினை அன்றைய தினம் நூலக பணியாளர்களுடன் இணைந்து சிறகுகள் அமைய செயற்பாட்டாளர்களும் மேற்கொண்டனர் சிறப்பிக்கத்தக்கதாக அமைகின்றது...
அன்றையதினம் பாடசாலை மாணவர்கள் முதல் வயதானோர் வரை கண்காட்சிக்கு வந்து பார்வையிட்டு சென்றது பெருமிக்கத்தக்கதாக அனைவருக்கும் அமைந்தது .
இக் கண்காட்சி எமது மரபுரிமைகளை பாதுகாத்துக்கொள்ளவும் இனி வரும் சமுதாயத்திற்கு அடித்தளமாகவும் இருக்கும் வகையில் வெற்றிகரமாக நடைபெற்றிருக்கிறது...
நூலக நிறுவனம்
நூலக இயக்குனர்- கோபிநாத்

Comments
Post a Comment