Posts

Showing posts from February, 2020

மரபுரிமைகளைத் தேடி..._ நூலக நிறுவனம்

Image
மறைந்த ஈழத்து ஆவணங்களை நோக்கி...நமது நூலக நிறுவனம் நடாத்தும்     மரபுரிமைகளை தேடி. (ஆவணப்படுத்தல், ஓலைச்சுவடிகள் கண்காட்சியும் ) எமது வரலாறுகள் , அடையாளங்கள் அழிவடைந்தும் மறைக்கப்பட்டும் வருகின்ற நிலையில் ஆவணப்படுத்தல் என்பது மிக முக்கியமானது.அத்தகைய ஆவணப்படுத்தல் என்பதை மேற்கொண்டு இதனூடாக எமது இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்த வரலாறுகளை எடுத்துச் செல்ல வேண்டும். குறிப்பாக எமது இளைய தலைமுறையினர் இவற்றை செய்ய முன்வருதல் அவசியமானது.  நூலக நிறுவனமானது 15 வருட காலமாக ஈழத்து தமிழ் பேசும் சமூகத்தினை எண்ணிம வடிவில் ஆவணப்படுத்தும் பணியில் 84000 ஆவணங்களை ஆவணப்படுத்தியுள்ளனர்.குறித்த ஆவணங்களில் தெரிவு செய்யப்பட்ட அரிய வகை ஆவணங்கள் கண்காட்சியில் ஆவணப்படுத்தப்பட்டது.  பத்திரிகைகள், ஓலைச்சுவடிகள் , சஞ்சிகைகள் , நினைவுமலர்கள் ஆகிய அச்சிடப்பட்ட ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அத்துடன் சுவடிகள் மின்வருடி ஆவணப்படுத்தும் முறைமை, நூலக இணையத்தளங்களை கையாளும் வழிமுறைமை, வாய்மொழி வரலாறு செயற்பாடுகள், தொழிற்சாலைகள் ஆவணப்படுத்தல். ஆகிய வகையான கண்காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டன. க