
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும், ஏய உணர்விக்கும் என் அம்மை- தூய உருப்பளிங்கு போல்வாள், என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராது இடர். இன்று நாம் பார்க்கப்போவது சரஸ்வதி வெள்ளைத்தாமரை மற்றும் வெள்ளை உடை அணிவதற்கான காரணம்...... சரஸ்வதி என்ற சொல்லுக்கு ஆறு எவ்வாறு ஓடுகின்றதோ அதைப்போல அறிவும், ஞானமும் கொண்ட அழகான பெண் என்பதாகும். சரஸ்வதி அணிந்துள்ள ஆடையின் மற்றும் அமர்ந்திருக்கும் மலரின் நிறமும் வெள்ளை. வானவில்லின் 7 வண்ணங்களில் சேராத வெள்ளையை சரஸ்வதிக்கு மட்டும் சாத்துவார்.தூய வெள்ளை ஆடை அணிபவர்களுக்கு தனிமரியாதை உண்டு.கற்றவர் மரியாதைக்குரியவர் என்பதை எடுத்துக்காட்டவே, கல்வி தெய்வமான சரஸ்வதியும் வெள்ளை ஆடை அணிந்திருக்கிறாள். வெள்ளை என்பது மாசுமருவற்றது. ஒருவன் கற்ற கல்வியும் மாசு மருவற்றதாக இருக்க வேண்டும் என்பதை இது காட்டுகின்றது. மலம் என்றால் அழுக்கு. உடலில் உள்ள அழுக்கை மலம் என்கின்றோம். நிர்மலம் என்றால் அழுக்கற்றது தெளிவானது. நன்மையும் தீமையும் கலந்து இருக்கும் இந்த உலகில் அழுக்கே இல்லாத கல்வியைத் தேர்ந்தெடுத்து, கற்க வேண்டும் என்பதையே அவளுக்குரிய வெள்ளைநிறம் உ ண...