01.11.2018 To 30.11.2018
வணக்கம் நண்பர்களே, எனது பணியானது முடிவடைவதற்கு இன்னும் 2 மாத காலங்களே உண்டு . மற்றும் இந்த மாதம் 935 Article Auto முறையில் என்னால் போடப்பட்டது. மற்றும் Cover Image க்கான Scripts இந்த மாதம் செய்யத்தொடங்கினேன். ஆனால் சில Error பிரசினைகளால் இன்னும் செய்யத்தொடங்கப்படவில்லை. இந்த மாதம் எனக்கு Finale Of YGC7 உம் நடைபெற்றது. அது பற்றிய தகவலை நான் முதல் அனுப்பிய எனது Blog ல் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். மற்றும், Harichandran ஐயா அவர்கள் எனது பணி பற்றியும் நூலக நிறுவனம் பற்றியும் எனது பாடசாலைக்கு சென்று ஓர் அறிமுகம் கொடுக்குமாறு கூறி இருந்தார். நானும் சென்று எனக்கு தெரிந்த ஆசிரியர் ஒருவரிடம் இதை பற்றி உரையாடினேன். அவர் கூறினார் " தற்போது மாத தவணை பரீட்சைகள் ஆரம்பம் , எனவே பாடசாலை விடுமுறை விட்டு ஆரம்பமான போது அதிபரின் ஒத்துழைப்புடன் வந்து செய்யுமாறு கூறினார். மற்றும் Harichandran ஐயா அவர்கள் எனது பணி முடிவடைந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்றும் கேட்டிருந்தார். 6 மாத காலம் முடிவடைந்ததும் மீண்டும் 6 மாத கால ...