Post -29
வீட்டுத்தோட்டம் வீட்டுக் காய்கறித் தோட்டமானது, வீட்டின் பின்புறத்தில் சமையலறையில் வீணாகும் நீரைக் கொண்டு பழங்கள் மற்றும் காய்கறிகளை வளர்த்தல் இது வீட்டுத் தோட்டம், ஊட்டச்சத்து தோட்டம், வீட்டுக் காய்கறித் தோட்டம், காய்கறித் தோட்டம் என அழைக்கப்படுகிறது. வீட்டுத்தோட்டம் அமைக்கும் முறை வளர்க்கப்போகும் செடியின் அளவுக்குத் தகுந்த தொட்டிகளையோ, பைகளையோ தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றில், தென்னை நார்க்கழிவு, மணல், வண்டல் மண், செம்மண், தொழுவுரம், ஆட்டு எரு, மண்புழு உரம் ஆகியவற்றை சம அளவில் கலந்து.. தேவையான விதைகளை நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு தொட்டியிலும் அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ் ஆகிய உயிர் உரங்களில் தலா 100 கிராம் இட வேண்டும். பரந்தனில் இயற்கை வீட்டுத் தோட்டம் எம் உணவை நாமே எமது வீடுகளில் இயற்கை முறையில் பயிரிடுவதில் உள்ள பயன்களைக் கருத்திற் கொண்டு ஏழுதன்னார்வத் தொண்டு நிறுவனங்களானபுதிய வாழ்வு நிறுவனம், பரந்தன் பழைய மாணவர் சர்வதேச ஒன்றியம், கிளிநொச்சி மக்கள் அமைப்பு, இரட்ணம் அறக்கட்டளை, கல...